Home இலங்கை சமூகம் யாழில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக சிறீதரனிடம் மனு கையளிப்பு

யாழில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக சிறீதரனிடம் மனு கையளிப்பு

0

நெடுந்தூர சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து
நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (27) ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர
சேவைப் பேருந்து உரிமையாளர்களின் கம்பனி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மனு கையளிப்பு

இதனையடுத்து, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களும், அவர்களை பிரதிபலிக்கும்
சங்கங்களும் குறித்த மனுவை சிறீதரனிடம் வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார்
மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான
பிரச்சனைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version