Home சினிமா அஜித்தின் 65வது பட இயக்குனர் பற்றி வெளிவந்துள்ள தகவல்… யாருடன் கூட்டணி?

அஜித்தின் 65வது பட இயக்குனர் பற்றி வெளிவந்துள்ள தகவல்… யாருடன் கூட்டணி?

0

நடிகர் அஜித்

சினிமா மட்டுமே இருக்கக் கூடாது என தனக்கு பிடித்த விஷயங்களிலும் தொடர் ஆர்வம் காட்டி வருபவர் தான் நடிகர் அஜித்.

கார் ரேஸ் தனக்கு மிகவும் பிடித்த விஷயம், இடையில் அந்த பக்கம் அதிகம் செல்லாமல் இருந்தவர் இப்போது மீண்டும் கார் ரேஸில் வேறு எந்த வேலையிலும் கமிட்டாகாமல் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றியும் கண்டார்.

கார் ரேஸிங் தொடர்ந்து இப்போது துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இறங்கியுள்ளார்.

ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

இதைத்தாண்டி சமீபத்தில் அஜித் கொடுத்த ஒரு பேட்டி செம வைரலானது.

65வது படம்

நடிகர் அஜித் தனது 64வது படத்தில் குட் பேட் அக்லி ஹிட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார்.

பான்-இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் 65வது பட இயக்குனர் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் தனது 65வது படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த புதிய கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

NO COMMENTS

Exit mobile version