Home இலங்கை சமூகம் கிராம அபிவிருத்தி அமைச்சின் ‘நெக்ஸ்ட் ஸ்ரீ லங்கா’ திட்டம் ஆரம்பம்

கிராம அபிவிருத்தி அமைச்சின் ‘நெக்ஸ்ட் ஸ்ரீ லங்கா’ திட்டம் ஆரம்பம்

0

கிராம அபிவிருத்தி அமைச்சு “நெக்ஸ்ட் ஸ்ரீ லங்கா” என்ற திட்டத்தைத்
தொடங்கியுள்ளது.

இதன் மூலம் 200,000 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 50,000
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஏதிர்வரும் ஜூலை 15 முதல் 23ஆம் திகதி வரை பிரதேச செயலகங்கள் ஊடாக
முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சி திட்டம், NVQ நிலை 3 கற்கைநெறிகளுக்காக
50,000 ரூபாய் உதவித்தொகைகளை வழங்குகிறது.

சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு

சுற்றுலாத் துறையில் 20,000 வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புவதை நோக்கமாகக்
கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பங்கேற்பாளர்கள் தொழில் வழிகாட்டுதலை பெறுவார்கள் எனவும் ஆர்வமுள்ள
தொழில்முனைவோருக்கு பயிற்சி மற்றும் குறைந்த வட்டியில் கடன்களையும்
பெறமுடியும் எனவும் கிராம அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version