Home இலங்கை குற்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த யோஷிதவின் நண்பர்கள்

குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த யோஷிதவின் நண்பர்கள்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa )மகன் யோஷித ராஜபக்சவுடன்(Yoshitha Rajapaksa) இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற மூவரும் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள்

கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(21) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் யோஷித ராஜபக்சவுடன் சென்ற மூவர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, அவர்களைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

குற்றப்புலனாய்வு பிரிவு

இவ்வாறான பின்னணியிலேயே  குறித்த நபர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை, யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்திற்கு நேற்றையதினம்(25) சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Like This..

NO COMMENTS

Exit mobile version