Home இலங்கை சமூகம் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் போபகே…! வலுக்கும் எதிர்ப்பு

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் போபகே…! வலுக்கும் எதிர்ப்பு

0

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் நிமல் போபகேவை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் அச்சம் 

எனினும் தகவல் அறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்ட போது அதற்கு எதிராகவும் , தகவல் அறியும் உரிமைக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்ட நிமல் போபகேவை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளது.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் நிமல் போபகேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நிமல் போபகே குறித்த ஆணைக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அதன் பின் பொதுமக்களின் தகவல் அறியும் மனுக்கள் பதிலளிக்கப்படாமல் கிடப்பில் போடப்படும் நிலை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version