Home இலங்கை சமூகம் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை

ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது
ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(17.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“ஒன்பது ஆண்டுகளாக எங்களுடைய பிள்ளைகளை மீட்பதற்கு
பல்வேறு வழிகளிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இவ்வாறு போராடி சர்வதேசத்திற்கு உண்மை நிலைமைகளை எடுத்து கூறி வருகின்றோம்.

ஜனாதிபதியிடம் கோரிக்கை 

எமது பிள்ளைகளை தேடிய 300இற்கு அதிகமாக தாய் , தந்தையர் இறந்துள்ளனர்.

உள்ளூரில் எமக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஜெனீவா கூட்டத்தொடரிலும்
பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றோம்.

இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதாக சொல்லி
கால இழுத்தடிப்பையே செய்கின்றனர்.

இந்த ஒன்பதாவது கூட்டத் தொடரிலாவது ஜனாதிபதி சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று
நீதியை பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version