Home இலங்கை சமூகம் இலங்கையில் ஆபத்தான வைரஸ்..! 75 வீத இறப்பு வீதம்

இலங்கையில் ஆபத்தான வைரஸ்..! 75 வீத இறப்பு வீதம்

0

இந்தியா மற்றும் பங்களாதேஷில் அதிகமான உயிர்களைக் காவு கொண்ட நிபா வைரஸ், இலங்கையில் உள்ள வௌவால்களில் பரவியிருப்பதாக இலங்கை விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சகம் மற்றும் ஜெர்மனியின் ரொபர்ட் கோச் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்விலேயே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் படி, இலங்கையில் உள்ள வௌவால்களில் நிபா வைரஸ் பரவலாக உள்ளது என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

இறப்பு வீதம்

பாதிக்கப்பட்ட வௌவால்கள் எங்கு செல்கின்றன, எவ்வளவு தூரம் பயணிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது நோய்கள் எவ்வாறு பரவக்கூடும் என்பதைக் கணிக்க மிகவும் முக்கியமானது என கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் இனோகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை வௌவால்களில் உள்ள நிபா வைரஸ் வகை,
இந்தியாவின் கேரளாவில் பரவும் வைரஸின் மரபணுவுடன் ஒருமித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையில் நிபா வைரஸ் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழந்திருப்பதோடு இதன் இறப்பு வீதம் 75% என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version