Home சினிமா இயக்குநர் மிஸ்கின் குலாப் ஜாமூன் மாதிரி.. சினிஉலகம் பேட்டியில் மனம் திறந்து பேசிய நித்யா மேனன்

இயக்குநர் மிஸ்கின் குலாப் ஜாமூன் மாதிரி.. சினிஉலகம் பேட்டியில் மனம் திறந்து பேசிய நித்யா மேனன்

0

சம்திங் ஸ்பெஷல் வித் சுஹாசினி

நமது சினிஉலகம் Youtube சேனலில் நடிகையும் தயாரிப்பாளருமான சுஹாசினி அவர்கள் தொகுத்து வழங்க, ‘சம்திங் ஸ்பெஷல் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்கிற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதில் நடிகர் மோகன், நடிகை ரேவதி, மீனா என பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை நித்யா மேனன் பங்கேற்றுள்ளார்.

இதில் தலைவன் தலைவி படம் குறித்தும், சினிமா அனுபவன்ங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பேட்டியில், ‘யார் குலாப் ஜாமூன் மாதிரி, வெளியே டார்க் உள்ள ரொம்ப ஸ்வீட்’ என சுஹாசினி கேள்வி கேட்க, அதற்கு ‘மிஸ்கின் சார்தான் அப்படி’ என நித்யா மேனன் பதில் கூறியுள்ளார்.

இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை நித்யா மேனன் நம் சினிஉலகம் பேட்டியில் கூறியுள்ளார். அதனை முழுமையாக இங்கு பாருங்க..

நித்யா மேனன் பேட்டி:

நித்யா மேனன் நடித்துள்ள புதிய திரைப்படம் தலைவன் தலைவி வருகிற 25ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version