Home இலங்கை சமூகம் பேருந்து – முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பேருந்து – முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு

அத்துடன், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம்

இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேருந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேருந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல வருடங்களாக விலைச்சூத்திரத்தின் கீழ் பேருந்து கட்டணம் அறவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விலைச்சூத்திரத்தின்படி, 10 ரூபாய் மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை. எனவே இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்படாது.”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version