Home இலங்கை சமூகம் அமைச்சர் பங்களாக்கள்: அரசாங்கத்தின் முடிவில் ஏற்பட்டுள்ள தாமதம்

அமைச்சர் பங்களாக்கள்: அரசாங்கத்தின் முடிவில் ஏற்பட்டுள்ள தாமதம்

0

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகியும், கொழும்பில் உள்ள அமைச்சர் பங்களாக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்த அமைச்சர் பங்களாக்கள் காடாக மாறி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ​​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சித்துறைஅமைச்சர் சந்தன அபயரத்ன, அமைச்சர் பங்களாக்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

வாடகை எடுக்க முன்வந்த நிறுவனங்கள் 

அமைச்சர் பங்களாக்களை வாடகைக்கு எடுக்க ஏற்கனவே பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூதரகங்கள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் அமைச்சர் பங்களாக்களை வாடகைக்கு எடுக்க முன்வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமைச்சர் பங்களாக்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாகும், இந்த அமைச்சர் பங்களாக்கள் ஒவ்வொன்றும் பாரிய நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், அவற்றை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version