Home இலங்கை சமூகம் ஜனநாயக அழிவின் ஆரம்பப் புள்ளி! சுட்டிக்காட்டும் முக்கிய அமைப்பு

ஜனநாயக அழிவின் ஆரம்பப் புள்ளி! சுட்டிக்காட்டும் முக்கிய அமைப்பு

0

ஊடக சுதந்திரம் இல்லாத இடத்தில் ஜனநாயகம் இல்லை என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று (15) கொண்டாடப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் உலகளவில் 70க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனநாயகத்தின் முடிவு

அதன்படி, ஊடகங்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகத்தின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது என்று சம்மேளனம் குறிப்பிட்டள்ளது.

மேலும், பத்திரிகைத்துறையை பாதுகாப்பதிலும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதிலும் சம்மேளனத்துடன் ஒன்று சேருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

 

NO COMMENTS

Exit mobile version