Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சிகள் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்

எதிர்க்கட்சிகள் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்

0

 எதிர்க்கட்சிகள் மக்களின் ஆணையை மதிக்க வேண்டுமென சுகாதார மற்றும் தொடர்பாடல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்திலும் ஆட்சி அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என ஒர் கட்சி கிடையாது எனவும் அவை தனித்தனியாக தங்களது கொள்கைகளை பிரசாரம் செய்து தேர்தலில் போட்டியிட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் எவ்வாறு எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க இடமளிக்க வேண்டும் எனவும் ஆட்சி நடாத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version