Home இலங்கை பொருளாதாரம் வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

0

இந்த ஆண்டில் வரி குறைப்பினை எதிர்பார்க்க முடியாது என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் மொத்த தேசிய உற்பத்தியில் 15.1 வீதம் வரி அறவீடு செய்யப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மறைமுகமான வரி அறவீடுகள் கால மாற்றத்துடன் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி குறைப்பு

ஏனெனில் இந்த ஆண்டில் வரி குறைப்பு மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வருமான அறவீடுகள் அதிகரித்தால் அதன் ஊடாகவும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கைத்தொழில்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதே தமது நோக்கம் என பிரதி அமைச்சர் சதுரங்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version