Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தின் இதயத்தில் கை வைக்கும் நிறுவனம் – கண்டும் காணாத மாநகரசபை

யாழ்ப்பாணத்தின் இதயத்தில் கை வைக்கும் நிறுவனம் – கண்டும் காணாத மாநகரசபை

0

யாழ் – நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் ஈழத்தமிழர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயத்தில் யாழ்ப்பாண மாநகரசபை (Jaffna Municipal Council) பொறுப்பு வாய்ந்த ஒரு அரச நிறுவனமாக நல்லூரின் புனித தன்மையே பேணவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டுளது.

உணவு பொதியொன்றில் திகதி பிரச்சினை என்ற ஒரு வலிதற்ற வழக்கை தாக்கல் செய்து மாநகரசபை குறித்த விடயத்தை மூடி மறைக்க பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மாநகரசபையின் பதிலை பெற முயன்றும் அது பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த உணவு நிலைய விளம்பரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முகநூலில் பகிர்ந்திருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 சட்டவிரோதமாக அனுமதி இல்லாத உணவகத்தை வைத்து ஏன் யாழ் மாநகரசபை வேடிக்கை பார்க்கிறது, இதன் பின்புலம் தொடர்பாகவும், தலையீடுகள் பற்றியும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு ……

https://www.youtube.com/embed/sScDis2komQ

NO COMMENTS

Exit mobile version