யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்டு இயங்கும் தன்னார்வ இளைஞர் அமைப்பான
சமாதானத்திற்கான இளைஞர் பேரவை நல்லூர் ஆலய முன்றலில் அமைய பெற்ற அசைவ
உணவத்திற்கு தமது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் ஆன்மீகத்தின் உயிர் மூச்சாக காணப்படும் நல்லூர் ஆலய சுற்றாடவட்டத்தில்
மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் அசைவ உணவகம் இருப்பது மிகுந்த மனவருத்தம்
அளிக்கின்றது.
அச்சுறுத்தலான செயற்பாடுகள்
இந்துக்கள் என்றும் அமைதியாக வாழும் மக்கள் ஆனால் அவர்களின் புனித கோயில்களை
சுற்றி அச்சுறுத்தலான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இது இந்துக்களின்
அமைதியை சீர்குலைக்கும் அம்சம் ஆகும்.இத்தகைய செயல்களை தொடர்ந்து நடைபெறாத வகையில் சட்டநடவடிக்கையை உடனடியாக எடுக்க
வேண்டும் எனவும் அரசாங்கம் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகம் இந்து சமய இயல்பு
மற்றும் மத உணர்வுகளை பாதுகாக்க உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்
கொள்கின்றோம் என்றுள்ளது.
