கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் வழங்கும் ” தர்க்கச் சுழல்” என்ற தலைப்பிலான விவாதப் போட்டி, திருகோணமலையின் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் இதில் கலந்து கொண்டு அறிவு, ஆழம் மற்றும் தர்க்கத்திறனைக் கொண்டு கலகலப்பான விவாதங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பிரபல அரசியல் பிரமுகர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன்,இ. சிறிநாத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தர்க்கம் மட்டும் அல்லாமல், மொழி நயம், கருத்து துல்லியம், ஒழுங்கு மற்றும் நடைமுறைகள் என பல்வேறு கோணங்களில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
