Home உலகம் உலகத்தை உலுக்கும் கூட்டணி: ரஷ்யாவுக்காக போர்க்களத்தில் குதிக்கும் வடகொரியா

உலகத்தை உலுக்கும் கூட்டணி: ரஷ்யாவுக்காக போர்க்களத்தில் குதிக்கும் வடகொரியா

0

உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போரில் சேதமடைந்துள்ள ரஷ்யாவின் (Russia) குர்ஸ்க் பகுதியை மீண்டும் கட்டமைக்க பொறியாளர்கள் மற்றும் இராணுவ ஊழியர்கள் என ஆறாயிரம் பேரை அனுப்ப வட கொரியா (North Korea) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

க்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உள்ள நிலையில். ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட சில நாடுகள் செயல்படுகின்றன.

கூட்டணி

இந்த போரில் இரு நாடுகளிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா செயல்படுகின்றது அத்தோடு, அந்நாட்டை சேர்ந்த வீரர்கள் ரஷ்யா உடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

இராணுவ பொறியாளர்கள் 

இந்தநிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கட்டமைக்கும் பணியில் அந்நாட்டிற்கு உதவ ஆயிரம் இராணுவ பொறியாளர்கள் மற்றும் ஐந்தாயிரம் இராணுவ ஊழியர்களை அனுப்பி வைக்க வட கொரியா முடிவு செய்துள்ளது.

இதனை ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளதுடன் அவர்கள் உக்ரைன் இராணுவத்தால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை கட்டமைப்பார்கள் எனவும், உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்த வட கொரியா வீரர்களுக்கு ஆதரவாக நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version