Home உலகம் உணவின்றி மண்ணை சாப்பிடுகின்றோம்: உலகை உலுக்கிய காசா சிறுவனின் காணொளி

உணவின்றி மண்ணை சாப்பிடுகின்றோம்: உலகை உலுக்கிய காசா சிறுவனின் காணொளி

0

காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் கருத்து தெரிவித்த சிறுவன், “காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காசாவுக்குள் வருகின்றன ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

மாவு தேவை

நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு உணவு இல்லை.

எங்குமே உணவு இல்லை, எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை, எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.

இரக்கம் காட்டுங்கள்

தயவுசெய்து கருணை காட்டுங்கள், நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம், தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்” என கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது ஒரு ரொட்டித் துண்டின் விலை 5.30 டாலர் (570 ரூபாய்) என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அந்த ஒரு ரொட்டித் துண்டும் மிகவும் சிறியது எனவும் அதுவும் எங்களுக்குப் போதவில்லை எனவும் சிறுவன் காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version