Home இலங்கை சமூகம் கடற்றொழில் மக்கள் ஜனாதிபதியை நம்புகிறோம் – முன்னாள் சமாசத் தலைவர் தெரிவிப்பு

கடற்றொழில் மக்கள் ஜனாதிபதியை நம்புகிறோம் – முன்னாள் சமாசத் தலைவர் தெரிவிப்பு

0

வடக்கு பகுதி கடலில் இந்திய(India) அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் வருகையை கடந்த
ஜனாதிபதிகளைப் பார்க்கிலும் தற்போதைய ஜனாதிபதி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக முன்னாள் யாழ். மாவட்ட
கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதபிரகாஷ்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் இன்று, நேற்று அல்ல நீண்ட காலமாக எமது
கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகளிடம் நாம் நமது பிரச்சினையை
கூறியும் எமக்கான நிரந்தர தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இந்திய இழுவை படகுகள் 

தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்கவிடமும் (Ranil Wickremesinghe) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் (Douglas Devananda) இந்திய அத்துமீறிய கடல் தொழிலாளர்களை
நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்தோம்.

அதன் அடிப்படையில், கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இலங்கை கடற்பரப்புக்குள்
நுழையும் இந்தியா கடற்றொழில் படகுகள் கைப்பற்றப்பட்டு, கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கை கடற்றொழில் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதுடன் தொடர்ந்து அத்துமீறி
நுழையும் இந்தியப்படகுகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி எமது
கோரிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதை பாராட்டுவதோடு
தொடர்ந்து அவரது செயற்பாட்டுக்கு கடல்  தொழில் சமூகம் ஆதரவாக செயற்படும்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version