17 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச்
சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை ஆளுநர் நேற்று (25) மாலை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
வாழ்த்து
இதன்போது, எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கவேண்டும்
எனவும் தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான
ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.