Home இலங்கை சமூகம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வடக்கு ஆளுநர் வெளியிட்ட செய்தி

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வடக்கு ஆளுநர் வெளியிட்ட செய்தி

0

நாளை (25) ஆரம்பமாகவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு (G.C.E A/L Exam) தோற்றவுள்ள மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (Nagalingam Vethanayagan) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கல்விப் பயணத்தில் முக்கியமான மைல் கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக அவர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் நம்பிக்கை 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மாணவர்கள் செயற்படுவார்கள் என நம்புகின்றேன்.

உங்களது கடின உழைப்பு, உறுதிப்பாடு ஆகியன வெற்றிக்கான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களில் நம்பிக்கை வைத்து உங்களாலான சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்“ என்று ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version