வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும்
வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
உரிய தீர்வுகள்
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை
கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை
நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும்
சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி பயன் பெற்றுள்ளனர்.
இதேபோல் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை
இடம்பெறவுள்ள திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிகப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/northern-governor-visites-people-next-week-1730638114
