Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் இயங்கவுள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம்

கிளிநொச்சியில் இயங்கவுள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம்

0

வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் எதிர்வரும் 3ஆம் திகதியில் இருந்து
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கி
வருகின்றது.

புதிய அலுவலகம் 

இதற்கான புதிய அலுவலகம் ஒன்று கிளிநொச்சி நகரில் பிரதான தபாலகம்
அருகில் அமைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட அலுவலகம் எதிர்வரும் 3ஆம் திகதி திறக்கப்பட்டு அன்று
தொடக்கம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது.

புதிய கட்டடத்துக்கான அடிக்கல் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய மாகாண காணி
ஆணையாளர் குகநாதனால் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version