வடக்கு தொடருந்து பாதை தொடருந்து சேவைகளுக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, யாழ்தேவி தொடருந்து, நாளை(23) முதல் வடக்கு தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருக்கை முன்பதிவு
அத்தோடு, யாழ்தேவி தொடருந்தின் முதல் வகுப்பு (AC) மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதிகளும் மேற்கொள்ளப்படவுள்னன.
