Home இலங்கை சமூகம் தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் நேற்று (01) முதல் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 7ஆம் திகதி முதல் இதை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று வரை குறித்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைக்கு அமைய, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், மாலைதீவுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய 13 நாடுகளில் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு இந்த நடைமுறை அவசியமாகவிருந்தது.

60 அமெரிக்க டொலர்

விண்ணப்பிக்கும் போது ​​பணியகப் பதிவைப் பெறுவதற்கு, அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் கடந்த காலங்களில், மனித கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை தொழிலாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு பாதுகாப்பாக அனுப்பும் நோக்கில் பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version