Home இலங்கை சமூகம் கொள்கலன் வாகன சாரதிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கொள்கலன் வாகன சாரதிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

0

ஏற்பட்டுள்ள கொள்கலன் நெரிசலை நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குறித்த சங்கம், ஏற்பட்டுள்ள கொள்கலன் நெரிசலை சரி செய்வதற்கான ஒரே வழி டிஜிட்டல் முறையைப் பின்பற்றுவதே என தெரிவித்துள்ளது. 

கொள்கலன் வாகன நெரிசல்

மேலும், பல மாதங்களாக நீடிக்கும் கொள்கலன் வாகன நெரிசல் குறித்து பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தாலும், இன்னும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

இந்நிலையல், கொள்கலன் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், அனுமதிப் பணிகளின் போது ஏற்படும் சிக்கல்களால் இந்த நெரிசல் ஏற்படுகிறது என தெரிவிக்கின்றனர். 

அத்துடன், தற்போதுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக துறைமுகம் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்களை ஆய்வு செய்யாமல் வளாகத்திலிருந்து வெளியே அனுப்புவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version