Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

0

105,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 10 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

 

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version