Home இலங்கை சமூகம் சுகாதார ஊழியர்களின் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு

சுகாதார ஊழியர்களின் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு

0

அவசரகால நிலை காரணமாக, சுகாதார ஊழியர்களின் விடுமுறை மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விடுமுறைகள் இரத்துசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுமுறை தொடர்பான அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

அதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version