Home இலங்கை அரசியல் இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது! அநுர பெருமிதம்

இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது! அநுர பெருமிதம்

0

புதிய இணைப்பு 

ஒரு நாட்டை கட்டியெழுப்ப மக்களின் அபிலாசைகளே முக்கியத்துவமிக்கது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,

நாட்டை மீட்டெடுக்க எமது இராணுவத்தினர் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி துனிகரமான செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு நாம் அர்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

அனர்த்தத்தின் போது உயிர்கள் இழக்கப்படும்.

ஆனால் இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது.

குழந்தைகள் தாங்கள் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை உண்டியலுடன் கொண்டுவந்து கொடுகின்றனர். இதுவே இலங்கையின் தற்போதைய உறுதிநிலை.” என கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது.

விசேட அறிவிப்பு

இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மணிக்கு ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பு வெளிவரும். 

https://www.youtube.com/embed/LFOKnAmrXd8

NO COMMENTS

Exit mobile version