அரசாங்கம் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்.
மக்கள் பாரிய ஆணை
எனவே, சாக்கு போக்கு சொல்லாது முன்னதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது போன்று வரிகள் குறைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் அதிகாரம் இல்லாத காரணத்தினால் பெறுமதி சேர் வரியை குறைக்க முடியாது, எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்பொழுது இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பாரிய ஆணையை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.