Home இலங்கை சமூகம் யாழ். போதனா வைத்தியசாலையை தரம் உயர்த்துவது குறித்து கலந்துரையாடல்

யாழ். போதனா வைத்தியசாலையை தரம் உயர்த்துவது குறித்து கலந்துரையாடல்

0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். போதனா
மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையிலான
குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணிப்பாளரது அறையில் நேற்று (6) நடைபெற்றுள்ளது.

இதன்போது,  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதன்
அவசியத்தை போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் ஆளுநருக்கு எடுத்துக் கூறினார்.

கோரிக்கை

அத்துடன் ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை என்பதுடன்
ஏனைய மருத்துவமனைகளுடன் ஆளணிகளை ஒப்பிட்டு போதனா மருத்துவமனைக்கான ஆளணியின்
எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவைப்பாடுகளையும் பணிப்பாளர் விளக்கமாகக்
குறிப்பிட்டார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கும்
நீண்ட கால நோக்கிலான 10 மாடியிலான புதிய கட்டடத்தின் தேவைப்பாடுகளையும்
அதற்கான வரைபடத்தையும் ஆளுநருக்கு காண்பித்து போதனா மருத்துவமனைப்
பணிப்பாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கான நிதியைப் பெற்றுத்தருமாறும்
ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version