Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்.பி மீது கடும் அதிருப்தியில் தமிழ் வாக்காளர்கள்

அர்ச்சுனா எம்.பி மீது கடும் அதிருப்தியில் தமிழ் வாக்காளர்கள்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளில் வேகம் இருக்கின்றதே தவிர, விவேகம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்த தமிழ் வாக்காளர்களே தற்போது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் ஐன்ஸ்டீன் சுட்டிக்காட்டினார். 

லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அர்ச்சுனாவின் சில நடவடிக்கைகளால் அவருக்கு வாக்களித்த சிலரே தற்போது ஏன் இவருக்கு வாக்களித்தோம் என்ற நிலையில் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கார்களில் ‘VIP’ மின்விளக்குகளை ஒளிரச் செய்து போதைப்பொருள் கடத்திய சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்துள்ளன. உதாரணமாக, மொனராகலையில் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் காரில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாட்டு விஜயங்களின் போது, விமான நிலையத்தில் கூட சாதாரண மக்கள் செல்லக்கூடிய பாதையூடாகவே சென்றார்.

எனவே, யாராக இருந்தாலும் பொலிஸ் மற்றும் சுங்க அதிகாரிகள் போன்ற அரசாங்க ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version