Home இலங்கை அரசியல் நாங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் மீற மாட்டோம்! அமைச்சர் லால் காந்த உறுதி

நாங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் மீற மாட்டோம்! அமைச்சர் லால் காந்த உறுதி

0

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும்
செயற்படமாட்டோம் என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிமல் மோசடி செய்யவில்லை.. 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாங்கள் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கினோம் அல்லவா, அமைச்சரவையில் 25
பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் என்று. இப்போது 25 அதிகரித்துவிட்டதா?
இல்லைத்தானே. அப்படியொன்றும் தெரியவில்லையே.

நாங்கள் கடந்த முறை அமைச்சர்களை நியமிக்கும்போது தேவையெனில் மேலும் சிலரை
நியமிப்பதற்கான ஒரு வெற்றிடத்தை வைத்திருந்தோம். எனினும், நாங்கள் எல்லையைக்
கடக்கமாட்டோம். இதுவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி.

எங்களுக்குத் தற்போது பொறுப்புக்கள் அதிகரித்ததன் காரணமாக அதற்காகப் பணியாற்ற
வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, கடமைகளைப் பகிந்தளிக்க வேண்டிய
தேவையுள்ளது. அதற்காகவே இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கை.

எங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தோழரைப் பற்றி நன்கு தெரியும். முழு
அர்ப்பணிப்புடன் தனது கடமையை மேற்கொண்டு வரும் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில்
அவருக்கு எந்தவொரு மோசடி நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version