Home இலங்கை பொருளாதாரம் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுள்ளோம்

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுள்ளோம்

0

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதாக காணி பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 1400 பில்லியன் ரூபா நிதியை அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்த முடிந்தால் பொருளாதார வளர்ச்சியை 2 அல்லது 3 சதவீதத்தினால் உயர்த்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி அல்லது வேறும் நிதிகள் என்பனவற்றை பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version