Home இலங்கை சமூகம் வடக்கு – கிழக்கில் அநுரவின் புகைப்படத்துடனான சுவரொட்டியால் குழப்பம்

வடக்கு – கிழக்கில் அநுரவின் புகைப்படத்துடனான சுவரொட்டியால் குழப்பம்

0

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த பிக்கு ஒருவரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆசி பெரும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறித்த சுவரொட்டியில் “பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும்
வேண்டும்” என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, NPP ஆதரவை அணி என்ற உரிமத்துடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையும் காணக் கூடியதாக உள்ளது.

சந்தேகத்தில் மக்கள்

அத்துடன், தென்மராட்சிப் பகுதிகளின் கிராமங்கள் தோறும் குறித்த சந்தேகத்திற்கிடமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை (06) இடம்பெறவுள்ள நிலையில், இனந்தெரியதாக நபர்களால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது, மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version