நாடு முழுவதும் 192 உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டை தேசிய மக்கள்
சக்தி பெற்றுள்ளது.
இவற்றில், அந்த கட்சி 151 அமைப்புக்களில், நேரடி பெரும்பான்மையைப் பெற்றுள்ள அதே நேரத்தில், தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மையைப் பெற்று,
ஏனைய 41 சபைகளில் நிர்வாகங்களை அமைத்துள்ளது.
பெரும்பான்மை இல்லாத, 95 உள்ளூராட்சி மன்றங்கள்
இதில் அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளர் பதவியை வகிக்கிறது, அதே நேரத்தில் உப
தவிசாளர்களாக, தேசிய மக்கள் சக்தியினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத, 95
உள்ளூராட்சி மன்றங்களில் 53 இல் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கட்டுப்பாட்டைப்
பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்துள்ளார்.
அந்த 53 சபைகளில் 22 சபைகளில் மட்டுமே, ஐக்கிய மக்கள் சக்தி நிர்வாகங்களை
அமைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை
வடக்கில் 16 சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
சீதாவகபுர நகர சபை, சீதாவகபுர பிரதேச சபை மற்றும் மாவதகம பிரதேச சபை
ஆகியவற்றின் அமர்வுகள் ,ரகசிய வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட உள் மோதல்கள்
காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஆரம்ப அமர்வும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025, ஜூன் 20 ஆம் திகதிக்குள், நாடு முழுவதும் உள்ள 339
உள்ளூராட்சி அமைப்புகளில் 245 இல் நிர்வாகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
