Home இலங்கை அரசியல் அரசாங்கத்தை விரட்டுவதற்கான பேரணியல்ல! மொட்டு கட்சியின் அறிவிப்பு.

அரசாங்கத்தை விரட்டுவதற்கான பேரணியல்ல! மொட்டு கட்சியின் அறிவிப்பு.

0

அரசாங்கத்தை விரட்டுவதற்கு மக்களை கொழும்புக்கு கொண்டுவரவில்லை.அவ்வாறான ஒரு பிரயோனமில்லாத தீர்மானத்தை எடுக்கப் போவதில்லை என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை பேரணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 

அரசை விரட்டுவதற்கு அல்ல

அரசாங்கம் இப்போது பயத்தில் இருக்கிறது.

அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்களை திரட்டுவதாகவும் பேரணி நடத்துவதாகவும் தெரிவிக்கிறது.
நேற்று (20.11.2025) தங்காலையில் போதை பொருள் ஒழிப்புக்கான மாபெரும் மாநாட்டை நடத்தியது.

இதை ஜனாதிபதியின் வேலையில்லை.போதை பொருள் மாபியாவின் மூலத்தை கண்டு பிடியுங்கள்.பொலிஸ் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினருக்கு இவற்றை பாரபடுத்தவும் என்றார்.

  

NO COMMENTS

Exit mobile version