Home இலங்கை அரசியல் இளவரசர்களை மன்னராக்க முயற்சிக்கும் முகாம்கள்: ஐக்கிய மக்கள் சக்தி தகவல்

இளவரசர்களை மன்னராக்க முயற்சிக்கும் முகாம்கள்: ஐக்கிய மக்கள் சக்தி தகவல்

0

இளவரசர்களை மன்னராக்க முயற்சிக்கும் முகாம்களுக்கு நாம் செல்லவில்லை. பேரணிக்கு சென்றவர்கள் வேறொரு சூழ்ச்சியில் ஈடுபட்டனர். எங்களின் கொள்கையை நாங்கள் செயல்படுத்தினோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

21 ஆம் திகதி பேரணியால் நன்மையே நடந்துள்ளது. ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் நடுநிலை வகிக்கும் தலைவர்கள் யாரும் காட்டி கொடுக்கமாட்டார் என்பதை நிரூபித்துள்ளனர்.

அக்கில,நவீன்,ரூவான் ஆகியோர் செல்லவில்லை. அவர்களுக்கு அங்கு ஏதோ ஒரு சூழ்ச்சி நடப்பதாக அறிந்திருந்தனர்.

பேரணியில் கிடைத்த நன்மைகள்

இதற்கு தலைமை தாங்கிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு திருமண நிகழ்வு முக்கியமாகியுள்ளது. இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகின்றது.
நாங்கள் தான் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியினர்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கே அதிக உறுப்பினர் உள்ளனர்.
நாங்கள் நாமல் ராஜபக்சவுடனோ வேறு யாருடனும் கோபம் இல்லை. அரசியல் செய்வதென்றால் ஒரு கொள்கையுடன் செயற்பட வேண்டும்.

இவர்கள் நாட்டுக்கு தீங்கிளைத்தாலே மக்கள் கடந்த தேர்தல்களில் வீட்டுக்கு அனுப்பினர். ஏன் பேரவாவியில் இறங்க வேண்டும். அரசியல் செய்வதற்காக எந்த சாக்கடையிலும் சேர்ந்து பயணிக்க நாம் தாயாரில்லை என்றார்.

NO COMMENTS

Exit mobile version