Home இலங்கை சமூகம் நுகேகொட பேரணியில் 2K தலைமுறையை கடுமையாக சாடிய மகிந்த ஆதரவாளர்.. முன்னாள் STF அதிகாரி என...

நுகேகொட பேரணியில் 2K தலைமுறையை கடுமையாக சாடிய மகிந்த ஆதரவாளர்.. முன்னாள் STF அதிகாரி என தெரிவிப்பு!

0

நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் தன்னை முன்னாள் STF அதிகாரி என அறிமுகப்படுத்தி மகிந்த விவகாரத்தில் 2K தலைமுறையினரை கடுமையாக சாடியுள்ளார். 

குறித்த நபர் கருத்து தெரிவிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

மகிந்தவுக்கு ஆதரவு.. 

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறிப்பாக, 2000க்குப் பிறகு பிறந்தவர்களின் வாக்குகள் இல்லாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியின் தோல்வி ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார். 

குடிபோதையில் இருப்பது தோன்றும் குறித்த நபர், தன்னை சிறப்புப் படையின் முன்னாள் வீரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, அந்த நபர்,  2000க்குப் பிறகு பிறந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளதுடன், “நான் ஒரு முன்னாள் STF வீரர். நாட்டில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version