Home இலங்கை சமூகம் அரச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பேராசிரியர் வசந்த அத்துகோரள வெளியிட்டுள்ள தகவல்

அரச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பேராசிரியர் வசந்த அத்துகோரள வெளியிட்டுள்ள தகவல்

0

கடந்த ஆறு வருடங்களில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளின் எண்ணிக்கை

2018 ஆம் ஆண்டுக்குள் 42,14,772 மாணவர்கள் அரசு பாடசாலைகளில் இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 38,82,688 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே காலப்பகுதியில் அரச பாடசாலைகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு 10,175 அரச பாடசாலைகள் இருந்ததாகவும், அவை 2023ஆம் ஆண்டு 10096 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் எண்ணிக்கை

கடந்த 6 ஆண்டுகளில் பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 9,547 ஆக குறைந்துள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் 20 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 5,138 ஆக இருந்ததாகவும், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார, சமூக மாற்றங்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு மாற்றங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version