நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேரிடர் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வீதிகள் வர்த்தமானியில் குறிப்பிடப்படாதவை. அதாவது எந்த ஒரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாத பாதைகளாகும்.
வர்த்தமானியில் குறிப்பிடப்படாத வீதிகள்
ஆனால் கிராமங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வீதிகளாகும்.
200 வீதிகள் தோட்டங்களுக்கு சொந்தமானதாகும். தோட்டங்களால் இவை புனரமைக்கப்படுவதில்லை.
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கன மழையால் சில பாதைகள் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது.
இன்னும் சில பகுதிகளில் உள்ள மக்கள் நகரங்களுக்கு கால்நடையாக கூட செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.
ஜனாதிபதியின் உத்தரவு
நுவரெலியா மாவட்டத்தில் சாலை அமைப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பித்தல்களை விரைவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இந்த வீதிகளை, RDA வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது PRDA பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையோ பொறுப்பேற்க முன்வரவில்லை என்ற கருத்தும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது.
குறித்த 611 வீதிகளை A.B.C என பிரித்து உரிய நிறுவனங்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க ஆளுநருக்கு உத்தரவிட்டார்.
