Home இலங்கை சமூகம் நுவரெலியாவிலும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில்

நுவரெலியாவிலும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில்

0

நுவரெலியா மாவட்டத்திலும்  அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் இன்று(12) பிற்பகல் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் தங்களது போராட்டத்தினை மேற்கொண்டனர். 

 சம்பள நெருக்கடி

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக
நுவரெலியாவிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்
தொடர்பாகவும் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு
எதிராக எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கோஷங்களை எழுப்பி பிரதான நகரில் பேரணியாக சென்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version