Home இலங்கை சமூகம் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கல்வி இராஜாங்க அமைச்சருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0

Courtesy: Sivaa Mayuri

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரினால் 1987 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டிருந்த லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றை தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(05) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

1987 ஆம் ஆண்டு குறித்த பெருந்தோட்டத்தில் எழுதுவினைஞராக பணிபுரிந்தபோது அரவிந்தகுமாருக்கு உத்தியோகபூர்வ இல்லமாக இந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பெருந்தோட்டத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் அவர், சட்டவிரோதமாக வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையிலேயே, நேற்று(05)  நுவரெலியா நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version