Home விளையாட்டு இலங்கை வீரர் படைத்த புதிய வரலாற்று சாதனை!

இலங்கை வீரர் படைத்த புதிய வரலாற்று சாதனை!

0

நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு (New Zealand) எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (18) காலியில் ஆரம்பமானது.

இந்த போட்டியிலேயே குறித்த வரலாற்று சாதனையை இலங்கை வீரர் படைத்தார்.

புதிய சாதனை

அதாவது, விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம், பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீலின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் ஒருமுறை மட்டுமே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.

 டெஸ்ட் போட்டி

இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் , நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.

இரண்டு கைகளாலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு திறமைக்கு பெயர் பெற்ற கமிந்து மெண்டிஸ், தனது ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

அவர் ஏற்கனவே நான்கு சதங்கள், நான்கு அரை சதங்கள் உட்பட 800 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இதேவேளை, தற்போது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது நாள் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version