குருணாகல் வீதியில் தனித்து நின்ற வயோதிப பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தம்மிட பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
படல்கம காசிவத்த பகுதியில் குறித்த பெண் சுற்றித் திரிந்த போது, பிரதேசவாசிகள் அவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
ரணில் – பசில் இன்று முக்கிய சந்திப்பு: தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
மக்களின் செயல்
பின்னர் படல்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பிரதேசத்தில் இருந்து தான் அந்தப் பகுதிக்கு வந்ததாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்த பெண்ணை அவரது வீட்டில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தம்: இறுதிச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம்
குறித்த பெண்ணை இரண்டு நாட்களாக பிரதேசவாசிகள் தேடி வந்ததாகவும் அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.