Home இலங்கை சமூகம் புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

0

புத்தளம் (Puttalam) – புதிய எலுவாங்குளம், ஐலியகிராமம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்வபமானது, இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி உயிரிழந்தவரின் சடலத்தைப்
பார்வையிட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பொலிஸ் விசாரணை 

இவ்வாறு உயிரிழந்த நபர், முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும்
தோட்டமொன்றில் காவலாளியாக கடமை புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/old-man-died-in-puttalam-attacked-by-wild-elephant-1729182110

NO COMMENTS

Exit mobile version