யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் இன்றையதினம் (27) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது 72)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி அச்சுவேலியில் இருந்து நல்லூர் நோக்கி
துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவேளை பின்னால் வந்த முச்சக்கர வண்டி
அவரது துவிச்சக்கர வண்டியில் இருந்த ஊன்றுகோல் மீது தட்டியது.
உயிரிழப்பு
இதன்போது
குறித்த முதியவர் வீதியில் விழுந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு
திரும்பினார்.
அதன்பின்னர் நேற்றையதினம் (26) அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம்
ஏற்பட்டபோது மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண
விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
