Home இலங்கை சமூகம் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் பாடசாலை மாணவி

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் பாடசாலை மாணவி

0

கல்வி அமைச்சினால் நாடாத்தப்பட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் நயோலின் அப்றியானா என்ற மாணவி 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். 

பிரிவு 8,9இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று மன்னாரில் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

சிறந்த சாதனை 

இவருக்கான சான்றிதழ் கல்வி அமைச்சகத்தில் நேற்று (20.06.2025) கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் கௌரவ மதுர செனவிரத்னவால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதேவேளை, இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு நிலைகளைப் பெற்றுக்கொண்டனர்.

மன்னார் மறைமாவட்டம் சார்பாக சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவி அ. நயோலின் அப்றியானாவை பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர் அனைவரையும் வாழ்த்துக்கள் கூறி பாராட்டியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version