Home இலங்கை சமூகம் யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான் பருப்பு!

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான் பருப்பு!

0

புதிய இணைப்பு

யாழ்ப்பாணத்தில் கச்சான் பருப்பு
புரையேறியதால் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த குழந்தை நேற்றையதினம் (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியுள்ளது.

பின்னர்
நேற்று இரவு குழந்தை உறங்கிய நிலையில் எழுந்து வாந்தி
எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

வேர்க்கடலை சிக்கியதால் மரணம்

எனினும்
இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகம் பகுதியில் ஒரு வயது 8 மாதம் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

ஐயனார் வீதி சுன்னாகத்தில் வசிக்கும் சசிதரன் டனியா என்ற குழந்தையே இன்று (12) இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், திடீர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு (Base Hospital Thellippalai) கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் – பு.கஜிந்தன் 



NO COMMENTS

Exit mobile version