Home இலங்கை குற்றம் கொழும்பில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக் கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம்
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் நேற்று(09) சந்தேகத்துக்கிடமான முறையில்
காணப்பட்ட நபர் ஒருவரைக் கைது செய்து அவரது வீட்டைச் சோதனையிட்ட போதே இந்த
வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட

சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயில் இருந்து இலங்கைக்கு
வந்துள்ளார் எனவும், அதன்போது இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு
வந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்தப்
பெறுமதி 16 இலட்சம் ரூபா ஆகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version